துறை வரலாறு:
இக்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் வகுப்பானது 1979 - 80 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. முதுகலைத் தமிழ் வகுப்பானது 2012 - 2013 ஆம் ஆண்டிலும், ஆய்வியல் நிறைஞர் வகுப்பு (முழுநேரம் / பகுதிநேரம்) 2002 - 2003 ஆம் கல்வியாண்டிலும் முனைவர் பட்ட வகுப்பு (முழுநேரம் / பகுதிநேரம்) 2002 - 2003 ஆம் கல்வியாண்டிலும் தொடங்கப்பட்டன.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, கிராமப்புற மற்றும் முதல் தலைமுறையாகப் பட்ட வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு UGC-NET / TN-SLET மற்றும் TNPSC முதலான தேர்வுகளுக்கு இலவச வகுப்புகள் இத்துறையில் நடத்தப்படுகின்றன. இத்துறையில் பயின்ற பல மாணவர்கள் அரசு கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளில் உள்ளனர்.
இத்துறையில் பயிலும் மாணவர்களுக்குப் பாட அறிவைத் தருவதோடு மட்டுமல்லாமல் ஆய்வு மேடை, கருத்தரங்கம், ஆய்வரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றின் வழியாக மாணவர்களின் தனித்திறன்கள் அடையாளம் காணப்படுகின்றன. அவர்களின் படைப்பாற்றலை வளர்ப்பதோடு அவர்களை நற்பண்பு உள்ளவர்களாகவும் தலைமைப் பண்பு உள்ளவர்களாகவும் உருவாக்குவது இத்துறையின் நோக்கமாகும்.
இத்துறையில் பதினொரு நிரந்தரப் பேராசிரியர்களும் இரு கௌரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இப்பேராசிரியர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட சர்வதேசக் கருத்தரங்குகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட தேசியக் கருத்தரங்குகளிலும் பங்கேற்றுக் கட்டுரை அளித்துள்ளனர். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மானியக்குழுவின் பேராய்வுத்திட்டங்கள், குறுந்திட்டங்கள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வுத் திட்டங்களின் நிதிநல்கையைப் பெற்று இத்துறையில் ஆய்வுகள் நிகழ்த்தப் பெற்றுள்ளன.
இத்துறையில் துறைத்தலைவர்களாகப் பணியாற்றியோர் விவரம்:
1 |
முனைவர் அ. சின்னதுரை |
2022 - இன்று வரை |
2 |
முனைவர் மு. நடராஜன் |
2017 - 20.06.2022 |
3 |
முனைவர் சி. பானுமதி |
2011 - 2017 |
4 |
முனைவர் சு. நிர்மலா |
2007 - 2011 |
5 |
முனைவர் சு. துரை |
2006 - 2007 |
6 |
முனைவர் வை. சோமசுந்தரம் |
2005 - 2006 |
7 |
முனைவர் முல்லை சண்முகம் |
1998 - 2005 |
8 |
திரு. சே.மா.இராமசாமி |
1984 - 1998 |
9 |
திரு. கோவிந்தன் |
1978 - 1984 |
துறை செயல்பாடுகள்:
19.02.2020 அன்று நுண்கலை மன்றம் சார்பில் படைப்பாற்றல் பயிலரங்கம் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் பெ.முருகன் தலைமையுரையாற்றினார். புவியியல் துறைத்தலைவர் பேரா.பெ.சுந்தரசோழன் மற்றும் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் மு.நடராஜன் ஆகியோர் முன்னிலையுரையாற்றினர். கட்டுரை எழுதுதல் எப்படி? என்பது குறித்து முதல்வர் முனைவர் பெ.முருகன் அவர்களும் மேடைப் பேச்சு பேசுவது எப்படி? என்பது குறித்து நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி உயர்கல்வி இயக்குநர் முனைவர் அரசுபரமேசுவரன் அவர்களும் ஓவியம் வரைதல் குறித்தக் கோழிக்கால்நத்தம் அரசு மேனிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் ஆ.மகேந்திரன் அவர்களும் நடனம் ஆடுதல் குறித்து நாமக்கல் நவரச நாட்டிய கலாலயத்தின் நிறுவனர் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் டி.கனகராஜன் அவர்களும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தனர். நாமக்கல் மாவட்ட நூலக அலுவலர் (பொ) திரு.கோ.இரவி மற்றும் நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவைத் தலைவர் முனைவர் டி.எம்.மோகன் ஆகியோர் மாணவர்களுக்குப் பரிசு வழங்கினர்.
24.09.2019 அன்று நுண்கலை மன்றம் சார்பில் தமிழ்த்துறையும் இயற்பியல் துறையும் இணைந்து நடத்திய சிறப்புப்பட்டிமன்றம் சமூக ஊடகங்கள் மணாவர்களைச் சீர் படுத்துகின்றனவா? சீரழிக்கின்றனவா? என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் மு.நடராஜன் வரவேற்றார் கல்லூரி முதல்வர் பேரா.பெ.சுந்தரசோழன் தலைமையேற்றார். இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் சு.பங்காரு அவர் முன்னிலை வகித்தார். நடுவராக கவிஞர் அருட்கோ தெய்வசிகாமணி அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார். சீர்படுத்துகின்றன என்ற தலைப்பில் தமிழ்த்துறை உதவிப்பேராசியர் முனைவர் க.சந்திரசேகரன், மாணவர்கள் த.புரணிமா, ச.கோவிந்தராஜன், மு.ஜெயக்குமார், எ.மோகன்குமார் ஆகியோரும் சீரழிக்கின்றன என்ற தலைப்பில் இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் சு.பங்காரு மாணவர்கள் ம.சங்கவி, க.திவ்யா, கு.விக்னேஷ்குமார், அ.தமிழ்எழில் ஆகியோரும் பேசினர். இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பி.கந்தசாமி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
1.11.2018 அன்று தமிழ்த்துறையில் திரைப்படங்கள் வழியாக நம்பியகப்பொருள் இலக்கணத்தை எளிமையாக கற்பிப்பது எப்படி? என்ற தலைப்பில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் மு.நடராஜன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
23.10.2018 அன்று மகாத்மாவின் 150ஆவது பிறந்த நாள் முன்னிட்டு காந்தியச் செம்மல், இலக்கியச் செல்வர் முனைவர் குமரி ஆனந்தன் அவர்கள் காந்தியக் கனவுகள் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
31.08.2018 அன்று தமிழ் மன்றத் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் இலக்கிய ஆர்வலர் கவிஞர் அரிமா கோ. தெய்வசிகாமணி அவர்கள் திரை இசைப் பாடல்களில் இலக்கியச் சுவை என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
25.03.2018 அன்று பொன்விழா ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் முனைவர் அ. லீலாகுளோரிபாய் வரவேற்றார். புள்ளியியல் துறைத்தலைவர் முனைவர் கு.ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி மு.ஆசியாமரியம் தலைமையுரையாற்றினார். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர் சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலையுரையாற்றினர். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை இயக்குவித்து பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு விழாப் பேருரையாற்றினார். மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கி விழாச் சிறப்புரையாற்றினார். மாண்புமிகு சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்ட அமைச்சர் வெ.சரோஜா அவர்கள் மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கி விழாச் சிறப்புரையாற்றினார். ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, கல்லூரிக் கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ஜெ.மஞ்சுளா, தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இயக்கக இணை இயக்குநர் முனைவர் கு.நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். தாவரவியல் துறைத்தலைவர் க.வசந்தாமணி அவர்கள் நன்றியுரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சிகளைத் தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் அரசுபரமேசுவரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
24.03.2018 அன்று இயல் பிரிவில் திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், மு.களஞ்சியம் மற்றும் தமிழ்நாடு கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. பொழிலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இசைப் பிரிவில் நாமக்கல் கலைவளர்மணி சுந்தரவினோத் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நாடகப் பிரிவில் முனைவர் கி. பார்த்திபராஜா நாடகக் குழுவினரின் "பாரதி வருகிறார்"எனும் நாடகம் நடைபெற்றது. மேலும் சவகர் பால பவன் வழங்கும் பரதம், கரகம், சிலம்பம் ஆகிய தமிழ்ப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகள் நடைற்றன.
23.03.2018 அன்று பொன்விழாவை முன்னிட்டு முத்தமிழ் விழா நடைபெற்றது. இதில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் மு.நடராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் முனைவர் அ.லீலாகுளோரிபாய் தலைமையுரையாற்றினார். மேனாள் கல்லூரிக் கல்வி இயக்குநர் முனைவர் கா. சேகர் வாழ்த்துரை வழங்கினார்.
11.01.2018 அன்று நாமக்கல் அறிஞர்
அண்ணா அரசு கலைக்கல்லூரி பொன் விழாவையொட்டி தமிழ்த்துறையின் சார்பாக
திருவள்ளுவர் தினம்
மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்
உதவிப்பேராசிரியர்
முனைவர் பி. கந்தசாமி வரவேற்றார். முதல்வர் முனைவர் அ. லீலாகுளோரிபாய்
அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ் உதவிப்பேராசிரியர்
முனைவர் துரை. இரவிக்குமார் எழுதிய ஆண்
பேசும் பெண்ணியம், மூன்றாம் பிறை, யாப்பருங்கலக்காரிகை, தொல்காப்பியம்-எழுத்து,
ஆகிய நான்கு நூல்களை மேனாள் காவல் கண்காணிப்பாளர்
காக்கிப்பூ விஜயராகவன் வெளியிட்டார்.
மேனாள் காலால் துறை ஆணையர் சி.க.
கருப்பண்ணன் நூல்களைப் பெற்றுக் கொண்டார். நாமக்கல் தமிழ்ச்சங்க இணைச்
செயலர் திருக்குறள் திலகம் ராசாக்கவுண்டர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
நூல்கள் குறித்து தமிழ்த்துறைத்தலைவர்
முனைவர் மு. நடராஜன், உதவிப்பேராசிரியர்கள் முனைவர் அ. சின்னரை, முனைவர்
க. பூபதி ஆகியோர் விமர்சனம் செய்தனர் நூலாசிரியர் தமிழ்த்துறை
உதவிப்பேராசிரியர் முனைவர் துரை இரவிக்குமார்
நன்றியுரையாற்றினார். திருவள்ளுவர் தினத்தையொட்டி பொங்கல் வைத்து
மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர்
அரசு பரமேசுவரன் திறம்படச் செய்தார்.
14.02.2017 அன்று மகாகவி பாரதியாரின் 136ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நமது கல்லூரித் தமிழ்த்துறையின் சார்பில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும் வையத் தலைமைகொள் என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
15.12.2017
அன்று
பாரதி விழா நடைபெற்றது. இதில் முதல்வர்
முனைவர் அ.லீலாகுளோரிபாய் அவர்கள் தலைமையில்
"பாரதி
கண்ட புதுமைப்பெண் ஒரு கற்பனையே"
என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. வழக்குத் தொடுப்பவர்
தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் கா. சந்திரசேகரன் அவர்களும் வழக்கு
மறுப்பவர் முனைவர் பி.விஜயராணி தமிழ் உதவிப்பேராசிரியர், நாமக்கல்
கவிஞர் இராமலிங்கம்பிள்ளை மகளிர் கல்லூரி அவர்களும் சிறப்பித்தனர்.
இதற்கு நடுவராக தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் அரசுபரமேசுவரன் கலந்து
கொண்டு சிறப்பித்தார்.
28.07.2017 அன்று பொன்
விழாவையொட்டி தமிழ்த்துறையில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில்
சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநர், எழுத்தாளர்
திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பு
என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். நாமக்கல் தமிழ்ச்சங்க
தலைவர்
டாக்டர் ஆர். குழந்தைவேல்
அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.
மேனாள் தமிழ்த்துறைத்தலைவர் திரு. சே.மா. இராமசாமி மற்றும் மேனாள்
கல்லூரி மாணவர் முனைவர் டி.எம். மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொன்விழா சிறப்பு நிகழ்வு
தமிழ்த்துறையில் - பாரதி விழா
20.07.2017 அன்று முண்டாசு மகுடமானது என்ற தலைப்பில் திருச்சி தேசியக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சா. நீலகண்டன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
15.05.2017
- பாரதி விழா நடைபெற்றது. இதில் முதல்வர்
முனைவர் அ. லீலாகுளோரிபாய் அவர்கள் தலைமையில்
"பாரதி
கண்ட புதுமைப்பெண் ஒரு கற்பனையே" என்ற தலைப்பில் வழக்காடு மன்றம்
நடைபெற்றது. வழக்குத் தொடுப்பவர் தமிழ் உதவிப்பேராசிரியர்
முனைவர் கா. சந்திரசேகரன் அவர்களும் வழக்கு மறுப்பவர் முனைவர்
பி. விஜயராணி தமிழ் உதவிப்பேராசிரியர், நாமக்கல் கவிஞர்
இராமலிங்கம்பிள்ளை மகளிர் கல்லூரி அவர்களும் சிறப்பித்தனர். இதற்கு
நடுவராக தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் அரசுபரமேசுவரன் கலந்து கொண்டு
சிறப்பித்தார்.
முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் தமிழ்த்துறை நுண்கலை மன்றம் இணைந்து நடத்திய பொன்விழா
நினைவு சொற்போர் கூழற்கோப்பை மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி
22.03.2019 அன்று கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் தமிழ்த்துறை நுண்கலை மன்றம் இணைந்து நடத்திய பொன்விழா நினைவு சொற்போர் சுழற்கோப்பைப் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சங்கத்தின் பொருளாளர் மு.நடராஜன் வரவேற்றார். சங்கத்தின் தலைவர் முதல்வர் முனைவர் சீ.குணசேகரன் அவர்கள் தலைமையேற்றார். ஜோதி டிரான்ஸ்போர்ட் குப்புசாமி, நம்பிக்கை இல்லம் நிர்வாகி கதிர்ச்செல்வன், ஸ்ரீ சரவணா டைல்ஸ் நிர்வாகி தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள் முனைவர் பி.கந்தசாமி, முனைவர் ச.பாலமுருகன், முனைவர் சு.அன்பரசன், முனைவர் ப.நல்லுசாமி, கொ.சண்முகம், சி.சின்னுசாமி, முனைவர் இரா.கோபி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேச்சுப்போட்டியில் இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவி ப.யோகேஸ்வரி முதல் பரிசும், காளிபட்டி மகேந்திரா மகேந்திரா கலை அறிவியல் கல்லூரி மாணவி க.தாரகேஸ்வரி இரண்டாம் பரிசும், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பெறியியல் கல்லூரி மாணவி ச.ரித்திகா மூன்றாம் பரிசும் ஒட்டுமொத்த சுழற்கோப்பையை குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி மாணவர்கள் ஜெ.கவுதம், சு.கிருபாகரன் ஆகியோரும் பெற்றனர். ஆறுதல் பரிசாக பொட்டிரெட்டிபட்டி ஸ்ரீ ரெங்கேஸ்வரா கல்வியியல் கல்லூரி மாணவி ம.லேகேஸ்வரியும் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவி யு.நவமதி ஆகியோர் ஆறுதல் பரிசும் பெற்றனர் பரிசு பெற்றவர்களுக்களைப் பாராட்டியும் வாழ்த்துரையும் நாமக்கல் முன்னாள் நகர் மன்றத் தலைவரும் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க துணைத்தலைவருமாகிய இரா. கரிகாலன் அவர்கள் வழங்கினார். இதற்கான முன்னேற்பாடுகளை தமிழ்த்துறைப் பேராசிரியர் அரசுபரமேஸ்வரன் அவர்கள் செய்திருந்தார்.
ஆசிரியர்களின் விவரம்:
S. No. | Name | Qualification | Designation | Profile |
1 | Dr.P.Kandasamy | M.A., M.Phil., Ph.D (UGC-NET) | Associate Professor & Head | |
2 | Dr. P. Ezhilarasi | M.A., B.Ed., M.Phil., Ph.D. | Associate Professor | |
3 | Dr. K. Chandrasekaran | M.A., M.A., M.Phil., Ph.D. (UGC-NET), | Associate Professor | |
4 | Dr. S. Anbarasan | M.A., M.Ed., M.Phil., Ph.D. | Associate Professor | |
5 | Dr. P. Nallusamy | M.A., M.Phil., Ph.D. (UGC-NET) | Assistant Professor | |
6 | Dr. K. Bhoopathy | M.A., M.Phil., Ph.D. | Assistant Professor | |
7 | Dr. P. Innamuthu | M.A., M.Phil., Ph.D. | Assistant Professor | |
8 | Mr. N. Sekar | M.A., M.Phil., (UGC-NET, TN-SLET) | Guest Lecturer | |
9 | Dr. K .Alagirisamy | M.A., M.Ed., M.Phil., Ph.D. (UGC-NET) | Guest Lecturer | |
10 | Dr. M. Kannan | M.A., B.Ed., Ph.D. (UGC-NET JRF) | Guest Lecturer | |
11 | Dr .N. Krishnaveni | M.A., M.Phil., Ph.D. (UGC-NET) | Guest Lecturer | |
12 | Mr. R. Marimuthu | M.A., M.Phil.(UGC-NET) | Guest Lecturer | |
13 | Dr. P. Pradeepa | M.A., Ph.D. (UGC-NET) | Guest Lecturer | |
14 | Dr. V. Ramamoorthy | M.A., M.A., M.Phil., Ph.D. (UGC-NET), SET | Guest Lecturer | |
15 | Dr. A. Ramamoorthy | M.A., B.Ed., Ph.D. (UGC-NET JRF) | Guest Lecturer | |
16 | Dr. T. Senthiljothi | M.A.,M.Ed., M.Phil., Ph.D. | Guest Lecturer |